தமிழகத்தின் பட்டியலிடப்பட்ட சாதியினர்/பழங்குடியினர் நலத் திட்டம்
December 24 , 2024 20 days 135 0
தமிழக அரசு ஆனது, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் செயல் படுத்தப் படும் பல்வேறு நலத்திட்டங்களைப் பட்டியலிட்டுள்ளது.
அண்ணல் அம்பேத்கர் வணிக வாகையர் திட்டம் ஆனது, பட்டியலிடப்பட்ட சாதியினர் / பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த தொழில்முனைவோரின் பெரும் பொருளாதார மேம்பாட்டினை உறுதி செய்கிறது.
இந்த முன்னெடுப்பின் கீழ் மொத்தம் 1,303 பயனாளிகள் சுமார் 159.76 கோடி ரூபாய் மதிப்பிலான மானியங்களைப் பெற்றுள்ளனர்.
அயோத்தி தாசப் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம் ஆனது, சாலைகள் மற்றும் தெரு விளக்குகள் போன்ற வசதிகளை மேம்படுத்துவதற்கும், நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள ஆதி திராவிடர் குடியிருப்புகளுக்கு குடிநீர் வசதி வழங்கச் செய்வதற்காகவும் செயல்படுத்தப்பட்டது.
2024-25 ஆம் ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 1,966 திட்டங்கள் மேற்கொள்ளப் பட்டன.
தொல்குடி திட்டத்தின் கீழ், சுமார் 1,000 கோடி ரூபாய் செலவில் பழங்குடியினர் குடியிருப்புகளில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுகிறது.
பழங்குடியின மக்களுக்காக மொத்தம் 3,594 வீடுகள் கட்டப்படும்.
117.27 கோடி ரூபாய் செலவில் 120 இடங்களில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான அறிவு மையங்களை இத்துறை அமைத்துள்ளது.
300 கோடி ரூபாய் செலவில் 60 விடுதிகளும், ஆதி திராவிடர் நலப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகளும் கட்டப்பட்டது.
வெளிநாடுகளில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகையையும் இதில் வழங்கப் படுகிறது.