TNPSC Thervupettagam

தமிழகத்தின் மின்சார வாகன உற்பத்தி

September 29 , 2023 424 days 299 0
  • இந்த ஆண்டு இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட பத்து லட்சம் மின்சார வாகனங்களில் (EV) நான்கு லட்சத்திற்கும் அதிகமானவை தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டவையாகும்.
  • 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதி வரை 10,44,600 மின்சார வாகனங்கள் சாலைப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
  • தமிழ்நாட்டின் மின்சார வாகன உற்பத்தி நிலையம் ஆனது 4,10,000 (0.41 மில்லியன்) வாகனங்களுக்கு மேல் அதாவது 40 சதவீதத்திற்கும் அதிகமாக உற்பத்தி செய்துள்ளது.
  • வாகன உற்பத்தியின் தலைநகர் மற்றும் இந்தியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப் படுகின்ற தமிழகமானது தற்போது மின்சார வாகன துறையிலும் முன்னணி இடத்தினைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மின்சார வாகனங்கள் உற்பத்தி மையமாக கோயம்புத்தூர், திருச்சி, திருநெல்வேலி, மதுரை, சேலம் மற்றும் சென்னை ஆகிய ஆறு நகரங்களை உருவாக்குவதை அது அடையாளம் கண்டுள்ளது.
  • ஓலா எலக்ட்ரிக் நிறுவனமானது, கிருஷ்ணகிரியில் உள்ள அதன் மின்சார வாகன உற்பத்தி ஆலையில் 1,75,608 வாகனங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்துள்ளது.
  • கிருஷ்ணகிரியில் உள்ள டிவிஎஸ் மோட்டார் ஆலையானது, 1,12,949 வாகனங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்