TNPSC Thervupettagam

தமிழகத்தின் 2024 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை

February 21 , 2024 278 days 714 0
  • ‘தடைகளைத் தாண்டி வளர்ச்சியை நோக்கிச் செல்லுதல்’ என்ற கருத்துருவுடன் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
  • இது சமூக நீதி, விளிம்பு நிலையில் உள்ளவர்களின் நலன், தமிழ் இளைஞர்களை உலக சாதனையாளர்களாக மாற்றுதல், தகவல் சார்ந்த பொருளாதாரம், சமத்துவம், பெண்கள் நலன், நிலையான எதிர்காலம் மற்றும் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரம் ஆகிய மாபெரும் 7 தமிழ்க் கனவுகள் மீது கவனம் செலுத்தும் நிதிநிலை அறிக்கை ஆகும்.
  • மத்திய நிதிப் பரிமாற்றங்கள் உட்பட மொத்த வருவாய் வரவுகள் 2,99,009.98 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், இதில் முந்தைய ஆண்டை விட ஒரு சிறிய அதிகரிப்பு பதிவாகியுள்ளதைக் குறிக்கிறது.
  • மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ஆனது 1,95,172.99 கோடி ரூபாயாகப் பதிவாகியுள்ள நிலையில், இது சிறப்பான வளர்ச்சியைக் குறிக்கிறது.
  • இதற்கிடையில், சம்பளம், ஓய்வூதியம் மற்றும் நலத்திட்டங்களுக்கான குறிப்பிடத் தக்க ஒதுக்கீடுகளுடன் வருவாய்ச் செலவினம் ஆனது 3,48,288.72 கோடி ரூபாயாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • பலவித சவால்கள் இருந்த போதிலும், நிதிப் பற்றாக்குறையானது, நிதி ஒருங்கிணைப்பு இலக்குகளுக்கு ஏற்ப, மாநிலத்தின் மொத்த உள்மாநில உற்பத்தியில் 3.44% ஆக உள்ளது.
  • முதலமைச்சரின் தாயுமானுவர் வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ், வறுமையில் வாடும் ஐந்து லட்சம் குடும்பங்களைக் கண்டறிந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.
  • உலகளாவிய திறன் மையங்களில் (GCCs) அதிக ஊதியம் பெறும் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட புதிய ஊதிய மானிய முன்னெடுப்புகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ், 1 லட்ச ரூபாய்க்கு மேல் மாதச் சம்பளம் கிடைக்கப் பெறும் பணியிடங்களுக்கு முதல் ஆண்டில் 30% மானியமும், இரண்டாம் ஆண்டில் 20% மானியமும், மூன்றாம் ஆண்டில் 10% மானியமும் வழங்கப்படும்.
  • உலக அளவில் தமிழ் இலக்கியத்தை மேம்படுத்துவதற்காக தமிழக அரசு 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.
  • திருநர்களுக்கு இலவச உயர்கல்வியை அறிவித்துள்ளது.
  • இந்த முன்னெடுப்பு ஆனது, திருநர்களுக்கு உயர்கல்வியில் உள்ளடக்கம் மற்றும் சம வாய்ப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 23,000 தொடக்கப் பள்ளிகளிலும் திறன்மிகு வகுப்பறைகள் அமைப்பது உள்ளிட்ட அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு 1,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
  • தற்காலத் தொழில்துறை தேவைகளுக்கேற்ப தொழில்நுட்பக் கல்வியை மிகவும் நன்கு சீரமைக்கும் நோக்கத்தில் 45 பாலிடெக்னிக் கல்லூரிகளை தொழில்துறை 4.0 என்ற தரத்திற்கு மேம்படுத்த அரசு திட்டமிடப்பட்டுள்ளது.
  • பணிபுரியும் பெண்களுக்காக மூன்று புதிய தோழி விடுதிகளைக் கட்டமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
  • கோவையில் இரண்டு மில்லியன் சதுர அடியில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்.
  • தமிழ்நாடு மாநில தொழில்துறைகள் மேம்பாட்டுக் கழகத்துடன் (SIPCOT) சேர்த்து தஞ்சாவூரில் ஒரு புதிய தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்க அரசு திட்டமிட்டு உள்ளது.
  • அண்ணல் அம்பேத்கர் வணிக வாகையர்கள் திட்டத்திற்கு 120 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு திட்டத்தினை தமிழ்நாடு அரசு தொடங்க உள்ளது.
  • இது மாநிலத்தின் பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில் நுட்பங்களின் வளர்ச்சி மற்றும் பயன்பாட்டை மேம்படுத்துவதை பெரு நோக்கமாகக் கொண்டது.
  • 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் உலகப் புத்தொழில் நிறுவனங்கள் உச்சி மாநாட்டை நடத்த தமிழ்நாடு அரசு தயாராகி வருகிறது.
  • அரசுப் பள்ளி மாணவர்களை உயர்கல்வி பயில ஊக்குவிக்கும் நோக்கில், 'தமிழ்ப் புதல்வன்' திட்டத்தை அரசு அறிமுகப்படுத்த உள்ளது.
  • இந்த முன்னெடுப்பின் கீழ், உயர்கல்வி நிறுவனங்களில் அதிக மாணாக்கர்களின் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில், மாணவர்களின் கல்வி முயற்சிகளுக்கு ஆதரவாக 1,000 ரூபாய் மாதாந்திர உதவித் தொகையானது வழங்கப்படும்.
  • 100 அரசு கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் புதிய தொழில் திறன் மையங்களை அமைக்க அரசு உத்தேசித்துள்ளது.
  • தமிழக அரசு நான்கு ஒலிம்பிக் அகாடமிகளை (பயிற்சி மையங்களை) உருவாக்க உள்ளது.
  • திருப்பரங்குன்றம் மற்றும் திருநீர்மலையில் கம்பி வடம் மூலம் இயங்கும் தொங்கு ஊர்தி (ரோப்கார்) வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.
  • சௌராஷ்டிரா மற்றும் படுகா மொழிகள் மற்றும் தோடர், கோத்தர், சோளகர், காணி மற்றும் நரிக்குறவர் உள்ளிட்ட பழங்குடியினரின் மொழிகளை இனவரைவியல் என்ற வடிவில் ஆவணப்படுத்துவதற்காக 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • கீழடி அகழாய்வுத் தளத்தில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
  • ‘தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம்’ அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் ‘குடிசைகள் இல்லாத தமிழ்நாடு’ ஆக மாற்றுதல் என்ற திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.
  • ஏழைகளுக்கு வீட்டு வசதி வழங்க 3,500 கோடியில் ‘கலைஞரின் கனவு இல்லம்’ என்ற திட்டமானது செயல்படுத்தப்படும்.
  • சொத்து வரி திருப்பிச் செலுத்தும் திட்டம் ஆனது, அனைத்து முன்னாள் இராணுவ வீரர்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
  • இது மாநிலத்தின் 14 மாவட்டங்களில் கடலோர வளங்களை மீட்டெடுக்கும் திட்டமான TN-SHORE (நெய்தல் மீட்சி இயக்கம்) வெளியிட்டது.
  • பூந்தமல்லியில் 500 கோடி ரூபாய் செலவில் அதிநவீனத் திரைப்பட நகரம் அமைக்கப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்