TNPSC Thervupettagam

தமிழகத்தில் அருகி வரும் எட்டு தாவர இனங்கள்

June 22 , 2024 9 days 140 0
  • அருகி வரும் மற்றும் அரிய தாவரங்களைப் பாதுகாப்பதற்கான தமிழ்நாடு அரசின் திட்டமானது எளிதில் பாதிக்கப்படக்கூடிய, அருகி வரும் மற்றும் மிகவும் அருகி வரும் இனங்கள் நிலைகளில் உள்ள எட்டு வகையான அரிய தாவரங்களை பட்டியலிட்டு உள்ளது.
  • இந்த எட்டு தாவரங்களும் 25 அரிய தாவரங்களின் பட்டியலில் இருந்து பட்டியலிடப் பட்டுள்ளன.
  • இந்த எட்டு இனங்களும் 'பாதுகாப்பு நிலையில் முன்னுரிமை பெற்ற இனங்கள்' என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
  • சேலத்தில் உள்ள சேர்வராயன் மலைப்பகுதியில் காணப்படும் வெர்னோனியா ஷெவரோயென்சிஸ் மிகவும் அருகி வரும் நிலையில் உள்ள மர இனமாகும்.
  • ஏற்காட்டில் உள்ள இந்தியத் தாவரவியல் ஆய்வுத் துறையின் தாவரவியல் பூங்காவில் வெர்னோனியா ஷெவரோயென்சிஸ் மரம் ஒன்று இருந்தது.
  • கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆனைமலை மலைப் பகுதிகளிலும், வால்பாறை பீட பூமியின் சில இடங்களிலும் காணப்படும் பைலாந்தஸ் அனமலையானஸ் என்பவை மிகவும் அருகி வரும் நிலையில் உள்ள இனமாகும்.
  • ஆனைமலை புலிகள் வளங்காப்பகத்தில் காணப்படும் டிப்டெரோகார்பஸ் போர்டில்லோனி மற்றும் கொடைக்கானலில் உள்ள பழனி மலையின் வட்டக்கனல் சோலைக் காடுகளில் காணப்படும் எலேயோகார்பஸ் பிளாஸ்கோய் ஆகியவை அருகி வரும் நிலையில் உள்ள பிற தாவர இனங்கள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்