கடந்த இரண்டரை ஆண்டுகளில் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.
2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், 2,300 ஆக இருந்த தமிழக மாநிலத்தில் பதிவு செய்யப் பட்ட புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையானது தற்போது 6,800க்கும் அதிக அளவில் உள்ளது.
மாநில அரசானது சில புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆரம்பக் கட்ட நிதியை (TANSEED) வழங்குகிறது.
சென்னையில் உள்ள புத்தொழில் நிறுவனங்கள் சுமார் 150 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்துள்ளன.
இது முந்தைய ஆண்டை விட 71% அதிகமாகும்.
புத்தொழில் நிறுவனங்களுக்காக என்று ஒரு அழைப்பு மையம் (அழைப்பு எண் - 155343) சமீபத்தில் தொடங்கப்பட்டது.