TNPSC Thervupettagam

தமிழகத்தில் எம்.எல்.ஏ.க்களின் ஊதியம் ரூ.1.05 லட்சமாக உயர்வு

July 20 , 2017 2728 days 1172 0
  • சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஊதியத்தை ரூ.55 ஆயிரத்திலிருந்து ரூ.1.05 லட்சமாக உயர்த்தி தமிழக முதல்வர் அறிவித்தார்.
  • சட்டப்பேரவை உறுப்பினர்களின் மாதாந்திர ஊதியம் ரூ. 8 ஆயிரத்திலிருந்து ரூ.30 ஆயிரமாகவும் அவர்களின் இதர படிகளும் உயர்த்தி வழங்கப்படும்.
  • ஈட்டுப்படி மாதம் ஒன்றுக்கு ரூ.7 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரமாகவும், தொலைபேசி படி மாதம் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.7500-ஆகவும், தொகுதிப்படி மாதம் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரமாகவும், தொகுப்புப்படி மாதம் ஒன்றுக்கு ரூ.2,500-லிருந்து ரூ.5 ஆயிரமாகவும், வாகனப்படி மாதம் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்படும். தற்போது வழங்கப்படும் அஞ்சல்படி ரூ. 2,500-ஆகத் தொடர்ந்து வழங்கப்படும்.
  • இதன் முலம், தற்போது சட்டப்பேரவை உறுப்பினர்கள் மாதந்தோறும் பெறும் சம்பளம் மற்றும் இதர படிகள் சேர்த்து ரூ.55 ஆயிரம் என்பது மேலும் ரூ.50 ஆயிரம் உயர்ந்து, ஒரு லட்சத்து 5 ஆயிரம் மாதந்தோறும் பெறுவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்