நாடு முழுவதும் பதிவாகும் கண் தானத்தில் தமிழகம் சுமார் 25 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளது.
2021-22 ஆம் ஆண்டில் 5,422, 2022-23 ஆம் ஆண்டில் 8,274 மற்றும் 2023-24 ஆம் ஆண்டில் 9,400 கண் தானம் பதிவாகியுள்ளன.
தானம் செய்யப்பட்ட 92.85% கருவிழிகள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு என்று பயன்படுத்தப் பட்டுள்ளன.
கடந்த மூன்று ஆண்டுகளில், இராஷ்ட்ரிய பால் ஸ்வஸ்த்ய காரியக்ரம் மூலம் 4,87,469 பள்ளி மாணவர்களுக்கு கண் பார்வைத் திறன் ஆய்விற்குப் பின்னர் கண்ணாடிகள் வழங்கப் பட்டன.