TNPSC Thervupettagam

தமிழகத்தில் கிராமசபைக் கூட்டங்கள்

April 28 , 2022 946 days 565 0
  • நவம்பர் 01 ஆம் தேதியை மீண்டும் உள்ளாட்சித் தினமாக கடைபிடிக்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • 2007 ஆம் ஆண்டு முதல் தி.மு.க. ஆட்சியில் நவம்பர் 01 ஆம் தேதியானது உள்ளாட்சித் தினமாக அனுசரிக்கப்பட்டது.
  • 10 அளவுருக்களின் அடிப்படையில் சிறப்பாகச் செயல்படும் கிராமப் பஞ்சாயத்துகளுக்கு உத்தமர் காந்தி என்ற கிராமப் பஞ்சாயத்து விருது வழங்கப் பட்டு வந்த ஒரு நடைமுறையைத் தமிழக அரசாங்கம் மீண்டும் தொடங்க உள்ளது.
  • இது 2006 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டாலும் பின்னர் வந்த அதிமுக அரசால் நிறுத்தப்பட்டது.
  • ஓர் ஆண்டில், 37 மாவட்டங்களுள் ஒரு கிராமப் பஞ்சாயத்து தேர்ந்தெடுக்கப்படும்.
  • தமிழகத்தில் இதுவரை நான்கு முறை நடத்தப்பட்டு வந்த  கிராமசபைக் கூட்டங்கள் இனி ஆண்டிற்கு ஆறு முறை நடத்தப்படும்.
  • குடியரசு தினம் (ஜனவரி 26), தொழிலாளர் தினம் (மே 1), சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15) மற்றும் மகாத்மா காந்தியின் பிறந்த நாள் (அக்டோபர் 2) ஆகிய நாட்களோடு சேர்த்து, உலக தண்ணீர் தினம் (மார்ச் 22) மற்றும் உள்ளாட்சி தினம் (நவம்பர் 1) ஆகிய நாட்களில் இனி கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்