TNPSC Thervupettagam

தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள்

January 17 , 2022 1047 days 533 0
  • தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
  • அரியலூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், ராமநாதபுரம், நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர் மற்றும் விருதுநகர் ஆகிய இடங்களில் இந்தப் புதிய கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளன.
  • இது ஆண்டுதோறும் 1450 எம்.பி.பி.எஸ் மாணவர்களுக்கு இடமளிக்கும்.
  • 2021 ஆம் ஆண்டு மார்ச் 31 வரையிலான நிலவரப் படி, தமிழக அரசு மருத்துவக் கல்வி நிறுவனங்களில் எம்.பி.பி.எஸ் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையானது 3,550 ஆக இருந்தது.
  • சென்னைக்கு அருகில் பெரும்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள மத்திய செம்மொழி தமிழ் நிறுவனத்தின் (CICT - Central Institute of Classical Tamil) புதிய வளாகத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்