பல்வேறு மாவட்டங்களில் 8 வேளாண் பதப்படுத்தும் தொகுப்புகளை அமைப்பதற்கான மாநில அரசின் பரிந்துரைகளுக்கு அனுமதி அளிப்பதற்காக மத்திய அரசின் அமைச்சகங்களுக்கிடையேயான குழுவானது பிப்ரவரி 26 அன்று கூட இருக்கின்றது.
தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், கடலூர், விழுப்புரம் மற்றும் மதுரை ஆகிய இடங்களில் அமையவிருக்கும் இந்த வேளாண் பதப்படுத்தும் தொகுப்புகளுக்கான செலவினமானது ரூ. 218 கோடி என்று மதிப்பிடப் பட்டுள்ளது.
இவை பிரதான் மந்திரி கிசான் சம்பாடா யோஜனா (Pradhan Mantri Kisan Sampada Yojana - PMKSY) என்ற திட்டத்தின் கீழ் உள்ளடங்கும்.