இந்தியத் தரநிலைகள் வாரியம் (BIS) ஆனது, சமீபத்தில் IS 6541: 2024 தர நிலையினை திருத்தியமைத்துள்ளது என்பதோடு இது பள்ளிகளில் உணவு தயாரிக்க செய்வதற்குத் தேவையான சுகாதாரமான தர நிலைகளையும் பரிந்துரைக்கிறது.
BIS ஆனது திருத்தியமைக்கப்பட்ட குறியீட்டினைப் பற்றி விவாதிக்கவும், தமிழகத்தில் தரநிலையைச் செயல்படுத்துவதற்கான ஒருங்கிணைப்பை கோருவதற்காகவும் மிக விரைவில் மாநில அரசை அணுக உள்ளது.
சமையல் அறைகள் மற்றும் உணவுப் போக்குவரத்து வாகனங்களில் சுகாதாரமான நிலைமைகளைப் பேணுவதற்கான அடிப்படைத் தரத்தினைப் பரிந்துரைப்பதற்காக 1972 ஆம் ஆண்டில் குறியீடு வெளியிடப்பட்டது என்பதோடு மதிய உணவு வழங்கலை மட்டுமே இது உள்ளடக்கியதாகும்.
புதிய குறியீடானது குழந்தைகள் காப்பகங்கள் உள்ளிட்ட பள்ளிகளின் பல்வேறு நிலைகளில் மிகவும் நன்கு பேண வேண்டிய உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகளின் பரந்த வரையறைகளை உள்ளடக்கியது.
தற்போது 22 மாதங்கள் வரையிலான வயதுடைய குழந்தைகளுக்கான மையங்கள் விலக்கப் பட்டுள்ளன.