தமிழக ஆளுநர், புத்தாண்டின் முதல் கூட்டத் தொடருக்கான வழக்கமான உரையைப் படிக்காமல் சட்டப் பேரவையிலிருந்து வெளியேறினார்.
1991 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல், தமிழ்நாடு சட்டமன்றத்தின் வழக்கத்தின் படி, ஆளுநர் உரையின் தொடக்கத்தில் மாநில கீதமும், முடிவில் தேசிய கீதமும் இசைக்கப் படுகின்றன.
மாநில அரசு தயாரித்த ஆளுநர் உரையின் தமிழாக்கத்தினை சபாநாயகர் M.அப்பாவு வாசித்தார்.
ஆளுநரால் அங்கீகரிக்கப்பட்டு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட உரையை மட்டுமே பதிவாக எடுத்துக் கொள்வதற்கான தீர்மானத்தினை சபை ஏற்றுக் கொண்டது.