தமிழக தலைமைச் செயலாளர் 2024
August 22 , 2024
97 days
443
- தமிழக அரசானது, ஷிவ்தாஸ் மீனா அவர்களுக்கு அடுத்தபடியாக, மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான N.முருகானந்தம் அவர்களை தலைமைச் செயலாளராக நியமித்துள்ளது.
- அவர் தமிழகத்தின் 50வது தலைமைச் செயலாளராகப் பதவியேற்றுள்ளார்.
- மேலும், A. பத்மநாபன் (1985) மற்றும் A.P. முத்துசாமி (1999) ஆகியோருக்குப் பிறகு தலித் சமூகத்தினைச் சேர்ந்த மூன்றாவது தமிழக தலைமைச் செயலாளர் இவரே ஆவார்.
- அக்டோபர் மாதம் ஓய்வு பெற உள்ள திரு. மீனா, தமிழ்நாடு வீட்டு மனை விற்பனை ஒழுங்குமுறை ஆணையத்தின் (TNRERA) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Post Views:
443