மரம், மரம் வளர்ப்பு குறித்த தகவல்களை உள்ளடக்கிய'தமிழக மரக்களஞ்சியம்' என்ற செல்லிடப்பேசி செயலியை தமிழக வனத்துறை அறிமுகம் செய்துள்ளது.
புதுமை முயற்சி திட்டத்தின்கீழ் மாநில வனத்துறையால் இந்தச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
மரப்பண்ணையம் மேற்கொள்ளத் தேவையான அனைத்து தகவல்களும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தொகுக்கப்பட்டு இந்தச் செயலியில் இணைக்கப்பட்டுள்ளன.
இச்செயலியில்150 மரங்களுக்கான தகவல்களும், அவற்றின் வளர்ப்பு தொழில்நுட்பங்களும் வழங்கப்பட்டுள்ளன.
இம்மரங்கள்19 மர இனங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் தமிழகத்தின் மண் வகைகளுக்கேற்ப ஒவ்வொரு மாவட்டத்திலும் எவ்வகை மர வகைகளை வளர்க்க முடியும் என்பதும், ஊடுபயிர் மற்றும் வேளாண் காடுகளின் மாதிரிகளும், இதன் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டுள்ளன.
'மரக் களஞ்சியம்' என்னும் இச்செயலியை ஆன்ட்ராய்டு ரக செல்லிடப்பேசிகள் மற்றும் ஆப்பிள் கைபேசிகளிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலம்.