2023 ஆம் ஆண்டு ஏப்ரல்-ஜூன் மாதத்தில் தமிழகத்தின் சொந்த வரி வருவாய் ஆனது 34,311.23 கோடி ரூபாயாக குறைந்த அளவில் அதிகரித்துள்ளது.
இது கடந்த ஆண்டின் இதே காலக் கட்டத்தில் 33,923.04 கோடி ரூபாயாக இருந்தது.
மாநிலத்தின் சொந்த வரி வருவாய் (SOTR) ஆனது மொத்த வருவாயில் 70% ஆகும்.
கடந்த ஆண்டின் இதே காலக் கட்டத்தில் இருந்த 58.46 கோடி ரூபாயாக இருந்த தமிழக மாநிலத்தின் நில வருவாய் ஆனது 2023 ஆம் ஆண்டு ஏப்ரல்-ஜூன் மாதத்தில் 60.43 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
2023-24 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மாநிலத்தின் கலால் வரிகள் (மதுபான வருவாயை உள்ளடக்கிய) 2,620.66 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலக் கட்டத்தில் இது 2,594.55 கோடி ரூபாயாக இருந்தது.