TNPSC Thervupettagam

தமிழக வாக்காளர்கள்

June 4 , 2023 542 days 590 0
  • தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கையானது, எட்டு லட்சம் குறைந்து 6.12 கோடிக்கு மேல் உள்ளது.
  • இதில் 3.11 கோடி பெண்கள், 3.01 கோடி ஆண்கள் மற்றும் 7,900க்கும் மேற்பட்டோர் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் உள்ளனர்.
  • இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் பதிவான மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6.20 கோடியாகும்.
  • இதில் 3.15 கோடி பெண்கள், 3.04 கோடி ஆண்கள் மற்றும் 8,000க்கும் மேற்பட்டவர்கள் மூன்றாம் பாலினத்தவர் ஆவர்.
  • செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதியானது 6,51,077 வாக்காளர்களுடன் மாநிலத்திலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட ஒரு தொகுதியாகத் தொடர்ந்து திகழ்கிறது.
  • இதற்கு அடுத்தபடியாக 4,54,919 வாக்காளர்களுடன் கோவை மாவட்டத்தின் கவுண்டம் பாளையம் சட்டமன்றத் தொகுதி இடம் பெற்றுள்ளது.
  • சென்னை மாவட்டத்தின் துறைமுகம் என்ற ஒரு சட்டமன்றத் தொகுதியானது 1,69,292 வாக்காளர்களுடன் மாநிலத்திலேயே குறைந்த அளவிலான எண்ணிக்கையிலான வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக உள்ளது.
  • நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதி 1,69,750 என்ற அளவு வாக்காளர்களுடன் மாநிலத்திலேயே குறைந்த வாக்காளர்களைக் கொண்ட இரண்டாவது தொகுதியாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்