TNPSC Thervupettagam

தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கை

March 26 , 2023 612 days 335 0
  • வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் M.R.K. பன்னீர்செல்வம் அவர்கள், 2023-2024 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையினைத் தாக்கல் செய்தார்.
  • 2022-23 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில், வேளாண்மை மற்றும் அதைச் சார்ந்த துறைகளுக்கான ஒதுக்கீடானது 33,007.68 கோடியாக உயர்த்தப் பட்டு உள்ளது.
  • இது 2021-22 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீட்டில் வழங்கப்பட்ட 32,775.78 கோடியை விட சற்று அதிகமாகும்.
  • 2022-23 ஆம் ஆண்டில் 126 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி என்ற இலக்கினை எட்டுவதற்காக அரசு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
  • பயிர்க் காப்பீட்டுக்கான தவணை மானியத்தில் மாநில அரசின் பங்காக ரூ.2,337 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • முதலாவது வேளாண் நிதிநிலை அறிக்கையில் ‘கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் மேம்பாட்டுத் திட்டமானது’ அறிவிக்கப் பட்டது.
  • விவசாயிகளுக்குக் கூட்டுறவுப் பயிர்க்கடன் வழங்குவதற்காக ரூ.14,000 கோடி நிதி வழங்கப் படும்.
  • விவசாயிகளுக்கு ஆடு வளர்ப்பு, பால் பண்ணை, கோழி வளர்ப்பு மற்றும் மீன் வளர்ப்பு போன்ற நடவடிக்கைகளுக்கு வட்டியில்லா கூட்டுறவுக் கடன் வழங்குவதற்காக ரூ.1,500 கோடி நிதி வழங்கப்படும்.
  • நுண்ணீர்ப் பாசன திட்டத்தினைச் செயல்படுத்துவதற்காக ரூ.744 கோடி நிதி ஒதுக்கப் படும்.
  • தண்ணீர்ப் பற்றாக்குறையால் வேளாண்மை பாதிக்கப்பட்ட கிராமங்களில் 53,400 ஹெக்டேர் பரப்பளவில் நுண்ணீர்ப் பாசன வசதியினை நிறுவுவதற்காக ரூ.450 கோடி செலவிடப் படும்.
  • இயற்கை வேளாண்மை முறையினை மேற்கொண்டு அதனை ஊக்குவிக்கும் விவசாயிகளுக்கும், அதற்கு உதவியாக இருக்கும் சக இயற்கை விவசாயிகளுக்கும் நம்மாழ்வார் விருது வழங்கப்படும்.
  • இதற்காக குடியரசுத் தினத்தன்று 5 லட்சம் ரூபாய் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆகியவை வழங்கப் படும்.
  • காவிரி டெல்டா பகுதியில் வேளாண் தொழில்நுட்பம் சார்ந்தக் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்கத் திட்டத்தின் மூலம் தஞ்சாவூரில் புதிய பிராந்தியப் புத்தொழில் மையம் ஆனது உருவாக்கப்படும்.
  • ஆண்டு முழுவதும் வெங்காயம் மற்றும் தக்காளி ஆகியவற்றின் விநியோகத்தை உறுதிப்படுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
  • பட்டியலிடப்பட்ட சாதியினர் மற்றும் பழங்குடியினத்தவர் ஆகியோரினைச் சார்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீத மானியம் வழங்கப் படும்.
  • மா, கொய்யா, பலா, நெல்லிக்காய், எலுமிச்சை, சீத்தாப்பழம் போன்ற பல்லாண்டு கால பழ மரக்கன்றுகள் அடங்கிய தொகுப்புகள் 10 லட்சம் வீடுகளுக்கு வழங்கப்படும்.
  • ஏற்காடு தோட்டக்கலைப் பூங்கா மற்றும் சென்னையின் மாதவரத்தில் உள்ள அரசு தாவரவியல் பூங்காக்கள் அழகுபடுத்தப்படும்.
  • அதிக மகசூல் தரும் தொழில்நுட்பங்களைப் பற்றிக் கற்பிப்பதற்காக சுமார் 150 விவசாயிகள் இஸ்ரேல், நெதர்லாந்து, தாய்லாந்து, எகிப்து, மலேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கு வெளிநாட்டுச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள்.
  • கல்வித் துறையுடன் இணைந்து, பள்ளி மாணவர்களுக்காக வேளாண் சுற்றுலாவானது மேம்படுத்தப்படும்.
  • தேனி மாவட்டத்தில் வாழை உற்பத்திக்காக ரூ.130 கோடி செலவில் சிறப்புத் தொகுப்பு மேம்பாட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
  • வேளாண் கல்லூரிகள், ஆராய்ச்சி மையங்கள் அல்லது கிருஷி விக்ஞ்யான் கேந்திராக்கள் ஆகியவற்றில் இருந்து ஓர் அறிவியலாளர் ஒவ்வொரு தொகுதிக்குமான அதிகாரியாக நியமிக்கப்படுவார்.
  • காவிரி டெல்டாவின் நீர்பிடிப்புப் பகுதிகளில் உள்ள ஆறுகள், கால்வாய்கள் மற்றும் வடிகால் வாய்க்கால்களில் ரூ.90 கோடி மதிப்பீட்டில் தூர்வாரப்படும்.
  • திண்டிவனம், தேனி, திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை ஆகிய இடங்களில் உணவுப் பூங்காக்கள் அமைக்கப்படும்.
  • கரும்பு விவசாயிகள் பயன்பெறும் வகையில் வெல்ல உற்பத்தி ஊக்குவிக்கப்படும்.
  • முதல்வரின் திட்டத்தின் கீழ் 3,000 சூரியசக்தியில் இயங்கும் பம்புகள் அமைக்கப்படும்.
  • தமிழக மாநில மரமான பனைமரத்தின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக மாநில அரசானது 10 லட்சம் பனை விதைகளை வழங்க உள்ளது.
  • மஞ்சள் மற்றும் இஞ்சி சாகுபடிக்கு ரூ.3 கோடி ஒதுக்கப் படும்.
  • மயிலாடுதுறையில் உள்ள செயல்பாட்டில் இல்லாத NPKR ராமசாமி கூட்டுறவுச் சங்க சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்படும்.
  • சேலம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் துவரம் பருப்பு சாகுபடிக்கான சிறப்பு மண்டலங்கள் அமைக்கப்படும்.
  • விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து தகவல்களையும் வழங்குவதற்காக புதிய கைபேசி செயலி உருவாக்கப் படும்.
  • மயிலாடுதுறையில் ரூ.75 லட்சம் செலவில் மண் பரிசோதனை மையம் அமைக்கப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்