தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரான மு.க. ஸ்டாலின் அவர்களை 2021 ஆம் ஆண்டு மே 05 அன்று தமிழக முதல்வராக நியமனம் செய்தார்.
மேலும், புதிய தமிழக அமைச்சரவையினை அமைக்கவும் 2021 ஆம் ஆண்டு மே 07 அன்று சென்னையிலுள்ள ராஜ் பவனில் பதவியேற்பு விழாவினை நடத்தவும் ஆளுநர் அவருக்கு அழைப்பு விடுத்தார்.
மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது அமைச்சரவையில் அங்கம் வகிக்க உள்ள 34 அமைச்சர்களின் ஒரு பட்டியலையும் வெளியிட்டுள்ளார்.
அமைச்சர்களின் பெயர்களும் அவர்களுக்கான துறைகளின் பெயர்களும் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு அதற்கு ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது.