TNPSC Thervupettagam

தமிழ்நாடு அரசின் நிலையான நிலப் பயன்பாட்டுக் கொள்கை வரைவு

December 25 , 2024 19 days 122 0
  • மாநில அரசானது, 2004 ஆம் ஆண்டு தமிழ்நாடு நிலப் பயன்பாட்டுக் கொள்கையின் வரைவினை வகுத்த இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, மாநிலத் திட்ட ஆணையமானது (SPC) தமிழ்நாடு நிலையான நிலப் பயன்பாட்டுக் கொள்கை வரைவினை (SLUP) தயாரித்துள்ளது.
  • மிகவும் நீண்ட கால நிலைத்தன்மை இலக்குகளுடன் கூடிய நிலப் பயன்பாட்டினைச் சீரமைப்பதன் மூலம் நகரமயமாக்கல், சுற்றுச்சூழல் வளங்காப்பு மற்றும் பெரும் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஒரு நிலத்தை மேம்பாட்டு, வளங்காப்பு, வேளாண்மை மற்றும் மாறுதல் மண்டலங்களாக மாற்றுவதற்காக என, நகர்ப்புற வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும், சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்கும், வேளாண்மையினை மிகவும் நன்கு ஆதரிப்பதற்கும், மேம்பாட்டினைக் கட்டுப்படுத்துவதற்கும் இது முன்மொழிகிறது.
  • ஒருங்கிணைக்கப்பட்ட இடஞ்சார்ந்தத் திட்டமிடல், வள மேலாண்மையில் நிலையான நடைமுறைகள் மற்றும் நீடித்த நிலையான மேம்பாட்டு இலக்குகளுடன் (SDGs) நன்கு ஒருங்கிணைத்தல் ஆகியவற்றையும் இந்தக் கொள்கை வலியுறுத்துகிறது.
  • 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேலைவாய்ப்புக் கொள்கை, தண்ணீர்க் கொள்கை மற்றும் தெரு நாய் மேலாண்மை மற்றும் ஒழுங்குமுறைக் கொள்கை ஆகியவையும் ஆணையத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட மற்ற மூன்று கொள்கைகளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்