TNPSC Thervupettagam

தமிழ்நாடு அரசின் 10 சாதனைகள்

February 18 , 2024 281 days 662 0
  • தமிழக முதல்வர் அவர்கள் தற்போதைய அரசின் 10 சாதனைகளைப் பட்டியலிட்டார்.
  • இந்தியப் பொருளாதாரத்தில் தமிழகத்தின் ஒன்பது சதவீதப் பங்களிப்பானது மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியைக் காட்டுகிறது.
  • நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பங்கில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
  • நாட்டின் வளர்ச்சி விகிதம் 7.24 சதவீதமாக இருக்கும் பட்சத்தில் மாநிலத்தின் வளர்ச்சி விகிதம் 8.19 சதவீதமாக உள்ளது.
  • மாநிலத்தில் பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதோடு, தேசிய அளவிலான பண வீக்கம் 6.65 சதவீதமாக இருக்கும் பட்சத்தில் இம்மாநிலத்தின் பண வீக்கம் 5.97 சதவீதமாகக் குறைந்துள்ளது.
  • ஏற்றுமதித் தயார்நிலைக் குறியீட்டின் பட்டியலில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது மாநில அரசின் ஐந்தாவது சாதனையாகும்.
  • மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது
  • தொழில் துறை முதலீட்டுக்கு ஏற்ற சூழலை அரசு உருவாக்கி, நாட்டிலேயே 14வது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது மூன்றாவது இடத்தை அடைய உதவியது.
  • கல்வித் துறையில் தமிழகம் இரண்டாம் இடத்திற்கு உயர்ந்துள்ளது.
  • புதுமைமிக்கத் தொழில்துறைகளிலும் மாநிலம் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
  • பெண்கள், இளையோர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் விளிம்புநிலை மற்றும் ஒடுக்கப் பட்டவர்களின் நிலையை மேம்படுத்தியதே அரசின் 10வது சாதனையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்