தமிழ் மொழி மற்றும் சமூக நீதிக்கானப் பங்களிப்புக்காக என்று ஒன்பது நபர்களுக்கு முதலமைச்சர் அவர்கள் விருது வழங்கினார்.
தமிழ் வளர்ச்சித் துறையால் நிறுவப்பட்ட பின்வரும் விருதுகள் இதில் அடங்கும்:
2024 ஆம் ஆண்டிற்கான அய்யன் திருவள்ளுவர் விருது - தவத்திரு பால முருகனடிமை சுவாமிகள்;
‘பத்தமடை’ பரமசிவம் - பேரறிஞர் அண்ணா விருது (2023);
பெருந்தலைவர் காமராஜர் விருது- U.பலராமன் (2023);
பழனி பாரதி - மகாகவி பாரதியார் விருது (2023);
பாவேந்தர் பாரதிதாசன் விருது- M. முத்தரசு(2023);
தமிழ்த் தென்றல் திரு.வி.க விருது S. ஜெயசீலா ஸ்டீபன் (2023); மற்றும்
R. கருணாநிதிக்கு முத்தமிழ் காவலர் K.A.P. விஸ்வநாதம் விருது (2023).
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையால் ஏற்படுத்தப்பட்ட தந்தை பெரியார் விருது சுப. வீரபாண்டியன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையால் நிறுவப்பட்ட 2023 ஆம் ஆண்டிற்கான அம்பேத்கர் விருது ஆனது, தமிழ்நாடு பழங்குடியினர் சங்கத்தைச் சேர்ந்த P. சண்முகம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.