TNPSC Thervupettagam

தமிழ்நாடு அரசு விருதுகள் 2023

January 16 , 2024 185 days 3090 0
  • தமிழ் மொழி மற்றும் சமூக நீதிக்கானப் பங்களிப்புக்காக என்று ஒன்பது நபர்களுக்கு முதலமைச்சர் அவர்கள் விருது வழங்கினார்.
  • தமிழ் வளர்ச்சித் துறையால் நிறுவப்பட்ட பின்வரும் விருதுகள் இதில் அடங்கும்:
  • 2024 ஆம் ஆண்டிற்கான அய்யன் திருவள்ளுவர் விருது - தவத்திரு பால முருகனடிமை சுவாமிகள்;
    • ‘பத்தமடை’ பரமசிவம் - பேரறிஞர் அண்ணா விருது (2023);
    • பெருந்தலைவர் காமராஜர் விருது- U.பலராமன் (2023);
    • பழனி பாரதி - மகாகவி பாரதியார் விருது (2023);
    • பாவேந்தர் பாரதிதாசன் விருது- M. முத்தரசு(2023);
    • தமிழ்த் தென்றல் திரு.வி.க விருது S. ஜெயசீலா ஸ்டீபன் (2023); மற்றும்
    • R. கருணாநிதிக்கு முத்தமிழ் காவலர் K.A.P. விஸ்வநாதம் விருது (2023).
  • பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையால் ஏற்படுத்தப்பட்ட தந்தை பெரியார் விருது சுப. வீரபாண்டியன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
  • ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையால் நிறுவப்பட்ட 2023 ஆம் ஆண்டிற்கான அம்பேத்கர் விருது ஆனது, தமிழ்நாடு பழங்குடியினர் சங்கத்தைச் சேர்ந்த P. சண்முகம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்