முதல்வர் அவர்கள் 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு இயற்கை வேளாண்மைக் கொள்கை என்பதினை வெளியிட்டார்.
இந்தக் கொள்கையானது பாதுகாப்பான, ஆரோக்கியமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த உணவை வழங்குவதோடுச் சேர்த்து, மண் ஆரோக்கியம், வேளாண்மையியல் மற்றும் பல்லுயிர்த் தன்மை வளங்காப்பு மற்றும் பாதுகாத்தல் ஆகியவற்றினையும் நோக்கமாகக் கொண்டது.
இக்கொள்கையானது, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மறுமதிப்பாய்வு செய்யப் படும்.
இக்கொள்கையின் செயல்முறை முன்னேற்றங்களைக் கண்காணிப்பதற்காக மாநில அளவிலான மற்றும் மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்படும்.
சான்றிதழ் வழங்கீட்டு நடைமுறையை எளிதாக்குவதற்காக ஒற்றைச் சாளர முறை என்பது செயல்படுத்தப்படும்.
இயற்கை வேளாண்மைக் கொள்கையானது தமிழ்நாட்டில் இரசாயனமற்ற இயற்கை வேளாண்மையினை உறுதிப்படுத்தவும், மேம்படுத்தவும், ஆதரிக்கவும் உதவும்.
2.66 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவு நிலங்களில் இயற்கை வேளாண்மை மேற் கொள்ளப் படுவதுடன், இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது.
இந்திய அளவில் 31,629 ஹெக்டேர் நிலங்களில் இயற்கை வேளாண்மை மேற் கொள்ளப் பட்டு தமிழ்நாடு 14வது இடத்தில் உள்ளது.
இயற்கை வேளாண்மையில் அதிக பரப்பளவு நிலங்களைக் கொண்ட மாநிலமாக மத்தியப் பிரதேசம் உள்ள நிலையில் அதைத் தொடர்ந்து மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன.
2020-21 ஆம் ஆண்டில், தமிழ்நாடு மாநிலமானது 108 கோடி ரூபாய் மதிப்புள்ள 4,223 மெட்ரிக் டன் இயற்கை வேளாண் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது.