TNPSC Thervupettagam

தமிழ்நாடு இயற்கை வேளாண்மைக் கொள்கை

March 19 , 2023 490 days 320 0
  • முதல்வர் அவர்கள் 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு இயற்கை வேளாண்மைக் கொள்கை என்பதினை வெளியிட்டார்.
  • இந்தக் கொள்கையானது பாதுகாப்பான, ஆரோக்கியமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த உணவை வழங்குவதோடுச் சேர்த்து, மண் ஆரோக்கியம், வேளாண்மையியல் மற்றும் பல்லுயிர்த் தன்மை வளங்காப்பு மற்றும் பாதுகாத்தல் ஆகியவற்றினையும் நோக்கமாகக் கொண்டது.
  • இக்கொள்கையானது, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மறுமதிப்பாய்வு செய்யப் படும்.
  • இக்கொள்கையின் செயல்முறை முன்னேற்றங்களைக் கண்காணிப்பதற்காக மாநில அளவிலான மற்றும் மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்படும்.
  • சான்றிதழ் வழங்கீட்டு நடைமுறையை எளிதாக்குவதற்காக ஒற்றைச் சாளர முறை என்பது செயல்படுத்தப்படும்.
  • இயற்கை வேளாண்மைக் கொள்கையானது தமிழ்நாட்டில் இரசாயனமற்ற இயற்கை வேளாண்மையினை உறுதிப்படுத்தவும், மேம்படுத்தவும், ஆதரிக்கவும் உதவும்.
  • 2.66 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவு நிலங்களில் இயற்கை வேளாண்மை மேற் கொள்ளப் படுவதுடன், இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது.
  • இந்திய அளவில் 31,629 ஹெக்டேர் நிலங்களில் இயற்கை வேளாண்மை மேற் கொள்ளப் பட்டு தமிழ்நாடு 14வது இடத்தில் உள்ளது.
  • இயற்கை வேளாண்மையில் அதிக பரப்பளவு நிலங்களைக் கொண்ட மாநிலமாக மத்தியப் பிரதேசம் உள்ள நிலையில் அதைத் தொடர்ந்து மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன.
  • 2020-21 ஆம் ஆண்டில், தமிழ்நாடு மாநிலமானது 108 கோடி ரூபாய் மதிப்புள்ள 4,223 மெட்ரிக் டன் இயற்கை வேளாண் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்