கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்களை திறம்பட செயல்படுத்தியதற்காக தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையானது மத்திய அரசிடமிருந்து 13 விருதுகளைப் பெற்றுள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம், தேசிய கிராம – நகரத் திட்டம் மற்றும் தீன்தயாள் உபாத்தியாய கிராமின் கௌசல்ய யோஜனா போன்ற திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்தியதற்காக மாநிலம், மாவட்டம், பஞ்சாயத்து ஒன்றியம் மற்றும் கிராமப் பஞ்சாயத்து போன்ற பிரிவுகளில் தமிழ்நாடு விருதுகளைப் பெற்றுள்ளது.
இந்த நிதியாண்டில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையானது 31 தேசிய விருதுகளைப் பெற்றுள்ளது.