TNPSC Thervupettagam

தமிழ்நாடு எத்தனால் கலப்புக் கொள்கை

March 24 , 2023 614 days 410 0
  • தமிழக மாநில அரசின் தொழில் துறையானது, 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு எத்தனால் கலப்புக் கொள்கையினை (EBP) வெளியிட்டுள்ளது.
  • இதன்படி சர்க்கரைக் கழிவிலிருந்து எத்தனால் உற்பத்திச் செய்யும் ஆலைகளை நிறுவச் செய்யவும் அவற்றின் திறன்மிக்க பயன்பாட்டினை மேம்படுத்தவும் சர்க்கரை  தொழிற் சாலைகளுக்கு அரசு ஊக்கமளிக்கும்.
  • தற்போதுள்ள ஆலைகளின் திறன் பயன்பாட்டினை மேம்படுத்துவதன் மூலம், இந்த மாநிலத்தில் உள்ள சர்க்கரைத் தொழில்துறைப் புத்துயிர் பெறுவதற்கான ஒரு வாய்ப்பினையும் இந்தக் கொள்கை வழங்கும்.
  • எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் (OMCs) ஆனது, தற்போது மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து எத்தனாலை பெறுகின்றன.
  • எண்ணெய் விற்பனை நிறுவனங்களானது, தமிழ்நாடு எத்தனால் கலப்புக் கொள்கையின் கீழ் தற்போது, எரிபொருள் தர எத்தனாலை உற்பத்தி செய்வதற்காக, ஒரு நாளைக்கு 664 கிலோ லிட்டர் (KLPD) கொள்ளளவு வரை எத்தனால் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட ஆலைகளைக் கொண்டுள்ளது.
  • இவை மாநிலத்தில் உள்ள, 12% எத்தனால் கலப்புச் செயல்பாட்டிற்கு ஏற்ப எரிபொருள் தர எத்தனாலை உற்பத்தி செய்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்