தமிழக மாநில அரசின் தொழில் துறையானது, 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு எத்தனால் கலப்புக் கொள்கையினை (EBP) வெளியிட்டுள்ளது.
இதன்படி சர்க்கரைக் கழிவிலிருந்து எத்தனால் உற்பத்திச் செய்யும் ஆலைகளை நிறுவச் செய்யவும் அவற்றின் திறன்மிக்க பயன்பாட்டினை மேம்படுத்தவும் சர்க்கரை தொழிற் சாலைகளுக்கு அரசு ஊக்கமளிக்கும்.
தற்போதுள்ள ஆலைகளின் திறன் பயன்பாட்டினை மேம்படுத்துவதன் மூலம், இந்த மாநிலத்தில் உள்ள சர்க்கரைத் தொழில்துறைப் புத்துயிர் பெறுவதற்கான ஒரு வாய்ப்பினையும் இந்தக் கொள்கை வழங்கும்.
எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் (OMCs) ஆனது, தற்போது மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து எத்தனாலை பெறுகின்றன.
எண்ணெய் விற்பனை நிறுவனங்களானது, தமிழ்நாடு எத்தனால் கலப்புக் கொள்கையின் கீழ் தற்போது, எரிபொருள் தர எத்தனாலை உற்பத்தி செய்வதற்காக, ஒரு நாளைக்கு 664 கிலோ லிட்டர் (KLPD) கொள்ளளவு வரை எத்தனால் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட ஆலைகளைக் கொண்டுள்ளது.
இவை மாநிலத்தில் உள்ள, 12% எத்தனால் கலப்புச் செயல்பாட்டிற்கு ஏற்ப எரிபொருள் தர எத்தனாலை உற்பத்தி செய்கின்றன.