TNPSC Thervupettagam

தமிழ்நாடு காவல்துறையின் புதிய மற்றும் 30வது தலைமை இயக்குநர் (DGP)

July 1 , 2021 1302 days 808 0
  • டாக்டர் C. சைலேந்திரபாபு அவர்கள் தமிழ்நாடு காவல் துறையின் 30வது தலைமை இயக்குநராக நியமிக்கப் பட்டுள்ளார்.
  • இவர் 2021 ஆம் ஆண்டு ஜூலை 01 ஆம் தேதி முதல் பொறுப்பேற்க உள்ளார்.
  • இவர் இரண்டு ஆண்டுகள் என்ற ஒரு பதவிக் காலத்தை 2023 வரையில் வகிப்பார்.
  • காவல்துறையின் நடப்புத் தலைமை இயக்குநரான J.K. திரிபாதி அவர்கள் 2021 ஆம் ஆண்டு ஜுன் 30 ஆம் தேதியன்று ஓய்வு பெற்றார்.
  • சைலேந்திரபாபு இதற்கு முன்பு தமிழக இரயில்வே காவல்துறையின் தலைமை இயக்குநராகப் பணியாற்றினார்.
  • மேலும் இவர் தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
  • தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தற்போதைய டிஜிபி திரிபாதி, உள்துறைச் செயலாளர் பிரபாகர் மற்றும் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோருடனான ஒரு ஆலோசனைக்குப் பிறகு சைலேந்திரபாபுவின் பெயரை அறிவித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்