தனியாக சண்டையிட்டு ஆங்கிலேயப் படையை அழித்த ஒண்டி வீரன்.
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முதன்முறையாக வெள்ளையனே வெளியேறு எனக் குரல் கொடுத்த பூலித் தேவன்.
ஆங்கிலேயர்களுக்கு வரி செலுத்துவதை எதிர்த்த வீரன் அழகு முத்துக் கோன்.
மருது சகோதரர்களால் வழிபடப்பட்டு ஆதரிக்கப் பட்ட காளையார் கோவில் ஆகியவையும் இடம் பெற்றன.
இரண்டாவது காட்சிப் பீடம்
இரண்டாவது காட்சிப் பீடத்தில், மகாகவி பாரதியார், வ.உ. சிதம்பரனார், சுப்ரமணிய சிவா மற்றும் சீர்திருத்தவாதி விஜயராகவாச்சாரியார் ஆகியோரின் உருவங்கள் இடம் பெற்றிருந்தன.
மூன்றாவது காட்சிப் பீடம்
சமூகச் சீர்திருத்தம், பெண் விடுதலை, தீண்டாமை ஒழிப்பிற்காகப் போராடிய தந்தை பெரியார்.
சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்த இதர தமிழக தலைவர்கள் : இராஜாஜி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், காமராஜர், இரட்டைமலை சீனிவாசன், வாஞ்சிநாதன், தீரன் சின்னமலை, வ.வே.சு. ஐயர், காயிதே மில்லத், J.C. குமரப்பா மற்றும் கக்கன் ஆகியோரின் உருவங்கள் இடம் பெற்றிருந்தன.