TNPSC Thervupettagam

தமிழ்நாடு குடியரசு தின அணிவகுப்பு

January 29 , 2022 906 days 741 0
  • ஒட்டு மொத்த குடியரசு தின அணிவகுப்பின் தளபதியாக படைத் தளபதி அனுஜ் குப்தா செயலாற்றினார்.
  • தமிழ்நாடு குடியரசு தின அணிவகுப்பில் 3 காட்சிப் பீடங்கள் காட்சிப்படுத்தப் பட்டன.

முதல் காட்சிப் பீடம்

  • 3 காட்சிப் பீடங்களில் முதல் பீடமானது 1806 ஆம் ஆண்டில் நடைபெற்ற வேலூர் கலகத்தின் நிகழ்வுகளைச் சித்தரித்தது.
  • மேலும் அதில்,
  • ஆங்கிலேயருடன் போரிட்டு தனது அரசை மீட்டெடுத்த ஒரே அரசியான வேலு நாச்சியார்.
  • கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆயுதக் கிடங்கு மீது மேற்கொள்ளப்பட்ட ஒரு தற்கொலைப் படைத் தாக்குதலில் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்ட பெண் வீராங்கனை குயிலி.
  • ஆங்கிலேயர்களுக்கு எதிராக சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த வீரபாண்டியக் கட்ட பொம்மன்.
  • வீரபாண்டியக் கட்டபொம்மனின் படைத் தளபதியான வீரன் சுந்தரலிங்கம்.
  • தனியாக சண்டையிட்டு ஆங்கிலேயப் படையை அழித்த ஒண்டி வீரன்.
  • இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முதன்முறையாக வெள்ளையனே வெளியேறு எனக் குரல் கொடுத்த பூலித் தேவன்.
  • ஆங்கிலேயர்களுக்கு வரி செலுத்துவதை எதிர்த்த வீரன் அழகு முத்துக் கோன்.
  • மருது சகோதரர்களால் வழிபடப்பட்டு ஆதரிக்கப் பட்ட காளையார் கோவில் ஆகியவையும் இடம் பெற்றன.

இரண்டாவது காட்சிப் பீடம்

  • இரண்டாவது காட்சிப் பீடத்தில், மகாகவி பாரதியார், வ.உ. சிதம்பரனார், சுப்ரமணிய சிவா மற்றும் சீர்திருத்தவாதி விஜயராகவாச்சாரியார் ஆகியோரின் உருவங்கள் இடம் பெற்றிருந்தன.

மூன்றாவது காட்சிப் பீடம்

  • சமூகச் சீர்திருத்தம், பெண் விடுதலை, தீண்டாமை ஒழிப்பிற்காகப் போராடிய தந்தை பெரியார்.
  • சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்த இதர தமிழக தலைவர்கள் : இராஜாஜி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், காமராஜர், இரட்டைமலை சீனிவாசன், வாஞ்சிநாதன், தீரன் சின்னமலை, வ.வே.சு. ஐயர், காயிதே மில்லத், J.C. குமரப்பா மற்றும் கக்கன் ஆகியோரின் உருவங்கள் இடம் பெற்றிருந்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்