TNPSC Thervupettagam

தமிழ்நாடு குடியரசு தின விருதுகள் 2025

January 28 , 2025 26 days 113 0
  • தமிழ்நாடு முதல்வர் பல்வேறு விருதுகளை வெற்றியாளர்களுக்கு வழங்கினார்.
  • சென்னை அடையாறு நதி நீரில் மூழ்கிய மூன்று பேரை மீட்டத் தீயணைப்பு வீரர் K. வெற்றிவேல், 2025 ஆம் ஆண்டிற்கான வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கத்தைப் பெற்றார்.
  • இதுவரை 1,000க்கும் மேற்பட்ட உடல்களை நல்லடக்கம் செய்வதில் உதவிய இராமநாத புரம் மாவட்டத்தைச் சேர்ந்த S.A. அமீர் அம்சா, 2025 ஆம் ஆண்டிற்கான கோட்டை அமீர் விருதைப் பெற்றார்.
  • தேனி மாவட்டத்தைச் சேர்ந்த R. முருகவேல், நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தித் திறன் விருதைப் பெற்றார்.
  • காவல் ஆய்வாளர் P. சின்னகாமணன், தலைமைக் காவலர்கள் K. மகா மார்க்ஸ் மற்றும் K. கார்த்திக், இரண்டாம் நிலை காவலர்கள் K. சிவா மற்றும் P. பூமாலை ஆகியோர் காந்தி அடிகள் காவல் பதக்கங்களைப் பெற்றனர்.
  • மாநிலத்தின் சிறந்தக் காவல் நிலையங்களுக்கான முதல்வரின் கோப்பைகள்: மதுரை நகரம் (முதலாவது) திருப்பூர் நகரம் (இரண்டாமிடம்) மற்றும் திருவள்ளூர் மாவட்டம் (மூன்றாமிடம்).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்