15 ஆவது ‘வருடாந்திரக் கல்வி நிலை அறிக்கை 2020' என்ற அறிக்கையானது சமீபத்தில் பிரதாம் கல்வி அறக்கட்டளையால் வெளியிடப் பட்டது.
பிரதாம் அறக்கட்டளையானது நாட்டின் மிகப் பெரிய அரசு சாரா நிறுவனங்களில் ஒன்றாகும். இது விளிம்புநிலையில் உள்ள ஏழைக் குழந்தைகளுக்குத் தரமான கல்வியை வழங்குவதற்காகச் செயல்படுகிறது.
கோவிட்-19 தொற்றுக் காலத்தில் பள்ளிக் கல்வியின் பல்வேறு அம்சங்களையும் அதன் தாக்கத்தையும் கவனிப்பதை இந்த ஆய்வு நோக்கமாகக் கொண்டுள்ளது.
பள்ளிச் சேர்க்கை முறைகள், கிடைக்கக் கூடிய வீட்டு வளங்கள், கற்றலுக்கான வீட்டு ஆதரவு மற்றும் கற்றல் பொருள்களுக்கான அணுகல் ஆகியவை இதில் அடங்கும்.
சமீபத்திய கணக்கெடுப்பின்படி, தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களில் கிட்டத்தட்ட 93.7% மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள் கிடைத்து இருக்கின்றன. அதே நேரத்தில் 68.1% தனியார் பள்ளி மாணவர்களிடம் மட்டுமே பாடப் புத்தகங்களைக் கொண்டு உள்ளனர்.
கணக்கெடுக்கப்பட்ட அனைத்துக் குழந்தைகளிலும், தமிழ்நாட்டில் 64.6% பேர் மட்டுமே திறன்பேசிகள் மூலம் கற்றலுக்கான இணைய வழி அணுகலைக் கொண்டு இருப்பது கண்டறியப் பட்டுள்ளது.
பிற தரவுகள்
பள்ளிப் படிப்பு இடைநிற்றல் வீதம் அதிகரித்ததில் மேற்கு வங்கம் மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
அம்மாநிலத்தின் 99.7 சதவீத மாணவர்களுக்குப் பாடப் புத்தகங்களை வழங்கிய அடிப்படையிலும் மேற்கு வங்கம் மாநிலமானது நாட்டில் முதல் இடத்தைப் பிடித்து உள்ளது.