TNPSC Thervupettagam

தமிழ்நாடு கூலித் தொழிலாளர்கள் நலத் திட்டம் 1994 - திருத்தம்

February 18 , 2019 2108 days 823 0
  • தமிழ்நாடு கூலித் தொழிலாளர்கள் (கட்டுமானத் தொழிலாளர்கள்) நலத் திட்டம் 1994-ல் ஒரு திருத்தம் செய்வதன் மூலம் நகரத்தில் உள்ள பதிவு செய்யப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் அம்மா உணவகத்தில் உணவை இலவசமாகப் பெற முடியும் என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப் படவிருக்கிறது.
  • பெருநகர சென்னை மாநகராட்சியிலிருந்து பெறப்பட்ட பரிந்துரையின் அடிப்படையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோகத் துறையானது இதற்கான ஒரு அரசாணையைப் பிறப்பிக்கவிருக்கிறது.
  • இத்திட்டமானது தொழிலாளர்கள் தங்களுக்குத் தேவையான உணவை இலவசமாகப் பெற அனுமதிக்கிறது. மேலும் அவர்களின் மாதச் செலவானது உணவகங்களினால் பராமரிக்கப்படும்.
  • இந்த செலவினங்கள் அந்த உணவகங்களுக்கு தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தினால் (TNCWWD - Tamil Nadu Construction Workers Welfare Board) செலுத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்