TNPSC Thervupettagam

தமிழ்நாடு சட்டங்கள்

September 19 , 2021 1168 days 593 0
  • தமிழக சட்டசபையானது ஒரு மசோதாவினை, தமிழ்நாடு ஊதிய வழங்கீட்டுச் சட்டம், 1951 என்ற சட்டத்தின் மீது  நிறைவேற்றியுள்ளது.
  • கடந்த ஆண்டில் அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்ட அறிவிப்புகளுக்கு இது ஒரு செயல் வடிவத்தினைக் கொடுக்கும்.
  • இந்த மசோதாவினை அமைச்சர் துரைமுருகன் (சட்டமன்றத் துறைப் பொறுப்பினை வகிக்கிறார்) சட்டப் பேரவையில் அறிமுகப்படுத்தினார்.
  • கடந்த ஆண்டு மார்ச் 24 அன்று, அப்போதைய  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், ஒரு சட்டமன்ற உறுப்பினரின் குடும்பத்திற்கு வழங்க வேண்டிய மொத்தக் கொடுப்பனவானது ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என அறிவிக்கச் செய்தார்.
  • முன்னாள் சட்டப்பேரவை (சட்டசபை) உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற மேலவை உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதியமானது 20,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாயாக உயர்த்தப்படும்  எனவும் அவர் அறிவித்தார்.
  • உயிரிழந்தச் சட்டப்பேரவை மற்றும் சட்டமன்ற மேலவை உறுப்பினர்களின் சட்டப் பூர்வ வாரிசுகளுக்கு வழங்க வேண்டிய குடும்ப ஓய்வூதியமானது ரூ.10,000லிருந்து ரூ.12,500 ஆக உயர்த்தப்படும்.
  • முந்தைய அ.தி.மு.க. ஆட்சியின் போது இயற்றப்பட்ட ஒப்பந்த விவசாயம் தொடர்பான சட்டத்தை ரத்து செய்வதற்கான ஒரு மசோதாவும் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
  • தமிழ்நாடு வேளாண் உற்பத்தி மற்றும் கால்நடை ஒப்பந்த விவசாயம் மற்றும் சேவைகள் (மேம்பாடு மற்றும் வசதி) ரத்து மசோதா அறிமுகப்படுத்தப் பட்டது.
  • தமிழக அரசின் 2019 ஆம் ஆண்டு ஒப்பந்த விவசாயம் மற்றும் சேவைகள் சட்டமானது மத்திய அரசினால் முன்வைக்கப்பட்ட ஒரு மாதிரி மசோதாவினை அடிப்படையாகக் கொண்டது.   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்