பொதுமக்களின் கோரிக்கையை அடுத்து நகராட்சி அமைப்புகளில் வாடகை குடியிருப்பு கட்டிடங்களுக்கான சொத்து வரியை 100 சதவீதத்திலிருந்து 50 சதவீதத்திற்கு மிகாமல் என்ற வீதத்தில் 26 ஜூலை 2018 அன்று தமிழக அரசு குறைத்துள்ளது.
எனினும், மற்ற குடியிருப்பு கட்டிடங்களின் 50% சொத்துவரி உயர்வு மற்றும் குடியிருப்பு அல்லாத கட்டிடங்களின் 100% சொத்துவரி உயர்வு ஆகியவற்றில் எவ்வித மாற்றமும் இல்லை.
இந்த புதிய விகிதங்கள் ஏப்ரல் - செப்டம்பர் 2018-ன் அரையாண்டு காலத்திலிருந்து நடைமுறையில் இருக்கும்.
இந்த புதிய சொத்துவரி விகித அமைப்பு முறை பரந்த சென்னை மாநகராட்சி, மற்ற 11 மாநகராட்சி மன்றங்கள், 124 நகராட்சிகள் மற்றும் 528 நகர பஞ்சாயத்துகள் ஆகியவற்றுக்குப் பொருந்தும்.
சென்னையில் இதற்கு முன்பு கடைசியாக சொத்துவரி 1998ம் ஆண்டு திருத்தப்பட்டது.
சென்னையைத் தவிர மற்ற அனைத்து நகராட்சி அமைப்புகளிலும் இதற்கு முன்பு 2008-ம் ஆண்டு சொத்து வரி திருத்தப்பட்டது.