TNPSC Thervupettagam

தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டம், 2019

December 13 , 2024 10 days 44 0
  • இந்தச் சட்டத்தின் விதிகளின் கீழ் எட்டு தனியார் பல்கலைக்கழகங்களைச் சேர்க்கும் வகையில், 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத்தினைத் திருத்தியமைப்பதற்கான மசோதாவினைச் சட்டமன்றம் நிறைவேற்றியுள்ளது.
  • தற்போது இந்த எட்டு பல்கலைக்கழகங்களும் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) சட்டம் மற்றும் ஒழுங்குமுறைகளுடன் முழுமையாக ஒருங்கிணைக்கப் படவில்லை.
  • மாநில அரசானது, இந்த எட்டு தனியார் பல்கலைக்கழகங்களை அறிவிப்புகள் மூலம் முன்பே அறிவித்திருந்தாலும், ஒரு பல்கலைக்கழகத்தினைப் பாராளுமன்றச் சட்டம் அல்லது மாநில சட்டமன்றச் சட்டத்தின் மூலமாகவே நிறுவ முடியும் என்று UGC கூறி உள்ளது.
  • மேலும் சென்னைப் பல்கலைக் கழகத்தில் செவித் திறன் குறைபாடு உடையோர் மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகாரப் பதவிகளை வகிப்பதற்குத் தகுதியற்றவர்கள் என்று கூறும் சில விதிகளைத் திருத்தியமைப்பதற்காக வேண்டி மற்றொரு மசோதா தாக்கல் செய்யப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்