TNPSC Thervupettagam

தமிழ்நாடு தளவாடக் கொள்கை மற்றும் ஒருங்கிணைந்த தளவாடத் திட்டம்

March 24 , 2023 485 days 420 0
  • 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு தளவாடக் கொள்கை மற்றும் ஒருங்கிணைந்த தளவாடத் திட்டத்தினை முதலமைச்சர் வெளியிட்டார்.
  • இந்தக் கொள்கையின் குறிக்கோள் ஆனது, "மாநிலத்தின் மேம்பட்ட போட்டித்திறன் மற்றும் விரைவான பொருளாதார மேம்பாட்டிற்காக என்று தமிழக மாநிலத்தில் ஓர் ஒருங்கிணைந்த, நம்பகமான, செலவு குறைந்த மற்றும் நிலையானத் தளவாட அமைப்பை உருவாக்குவதை ஊக்குவிப்பதாகும்".
  • நவீன காலத் தொழில்நுட்பங்களை ஏற்றல், திறன் மேம்பாட்டினைச் செயல்படுத்துதல் மற்றும் தளவாட சூழல் அமைப்பில் நெகிழ்திறன் மற்றும் நிலைப்புத் தன்மையை உருவாக்குதல் ஆகியவை இந்தக் கொள்கையினுடைய முக்கிய நோக்கங்களின் ஒரு பகுதியாகும்.
  • இது அடுத்த 10 ஆண்டுகளுக்கான ஓர் உத்திசார் திட்டமாகும்.
  • இது இதற்காக அடையாளம் காணப்பட்ட திட்டங்கள், அவற்றிலிருந்துப் பெறவுள்ள விளைவுகள், காலக்கெடு மற்றும் அவற்றைச் செயல்படுத்துவதற்கான முக்கியப் பங்குதாரர்கள் ஆகியவற்றினைப் பற்றி குறிப்பிட்டுக் காட்டுகிறது.
  • இக்கொள்கையின் நோக்கம்:
    • மாநிலத்தில் தளவாடங்கள் (ஏற்றுமதி-இறக்குமதி மற்றும் உள்நாட்டு சரக்குப் போக்குவரத்து) சார்ந்த செலவினங்கள் குறைப்பு;
    • தளவாட உள்கட்டமைப்பின் மேம்பாட்டிற்கான தனியார் துறையின் பங்களிப்பை மேம்படுத்துதல்;
    • தளவாடத் துறை தொடர்பான பல்வேறு முன்னெடுப்புகளை உருவாக்குவதிலும், செயல்படுத்துவதிலும் மாநிலம் மற்றும் மத்திய தொழில்துறை நிறுவனங்களுக்கு இடையேயான திறன்மிக்க ஒருங்கிணைப்பு செயல்முறையினை உருவாக்குதல்.
    • மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட கனரக வாகன ஓட்டுநர்களுக்கு என்று நியாயமான விலையில் மருத்துவ மற்றும் சுகாதாரக் காப்பீடு வழங்குவதற்கான அம்சம் குறித்தும் அரசாங்கம் ஆய்வு செய்து வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்