ஜூலை 18 ஆம் தேதியானது தமிழ்நாடு தினமாக அனுசரிக்கப்படும் என்று தி.மு.க. அரசு அறிவித்துள்ளது.
1967 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதியன்று அப்போதைய மதராஸ் மாகாணத்தின் பெயரைத் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றுவதற்காக மாநிலச் சட்ட மன்றத்தில் அப்போதைய முதலமைச்சர் C.N. அண்ணாதுரை அவர்களால் ஒரு தீர்மானம் இயற்றப் பட்டது.
மேலும் இந்த ஆண்டு நவம்பர் 01 ஆம் தேதியன்று ‘எல்லைக் காப்பாளர்கள்‘ தலா 1 லட்சம் பரிசுத் தொகை வழங்கி கௌரவிக்கப்படுவர் என்றும் திரு. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மொழிவாரி மாநிலங்கள் உருவான போது தமிழகத்தின் எல்லையைக் காக்கும் பணியில் தனது வாழ்நாள் முழுவதும் ஈடுபட்ட வீரர்களே எல்லை காப்பாளர்கள் ஆவர்.