TNPSC Thervupettagam

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதிகள் – 2023

April 30 , 2023 577 days 1241 0
  • நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான புதிய விதிகளைத் தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.
  • தமிழ்நாட்டில் நகர அமைப்புகள் மாநகராட்சிக் கழகங்கள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகள் ஆகியவை 4 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
    • 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட மாநகராட்சிகள் சிறப்பு நிலை மாநகராட்சியாகவும்,
    • 5 முதல் 10 லட்சம் வரை மக்கள்தொகை கொண்ட மாநகராட்சிகள் தேர்வு நிலை மாநகராட்சியாகவும்,
    • 3 முதல் 5 லட்சம் வரை மக்கள்தொகை கொண்ட மாநகராட்சிகள் முதல் நிலை மாநகராட்சியாகவும்,
    • 3 லட்சம் வரை மக்கள் தொகை கொண்ட மாநகராட்சிகள் இரண்டாம் நிலை மாநகராட்சியாகவும் வகைப்படுத்தப் பட்டுள்ளன.
  • வருமானத்தின் அடிப்படையிலான பிரிவுகள்:
    • 15 கோடிக்கு மேல் வருமானம் கொண்டவை சிறப்பு நிலை நகராட்சிகளாக வகைப் படுத்தப் பட்டுள்ளன.
    • 9 கோடி முதல் 15 கோடி வரை வருமானம் கொண்டவை ஆய்வு (கண்காணிப்பு) நிலை நகராட்சிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
    • 9 கோடி முதல் 6 கோடி வரையிலான வருமானம் கொண்டவை முதலாம் நிலை நகராட்சிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
    • 6 கோடிக்கும் குறைவான வருமானம் கொண்டவை இரண்டாம் நிலை நகராட்சிகளாக வகைப்படுத்தப் பட்டுள்ளன.
  • மேலும், மாநகராட்சிக் கழகங்கள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் மக்கள் தொகை அடிப்படையிலும் கவுன்சிலர்களின் (மன்ற உறுப்பினர்களின்) எண்ணிக்கை தேர்ந்தெடுக்கப்பட உள்ளது.
  • மக்கள்தொகை அடிப்படையில் கவுன்சிலர்களின் எண்ணிக்கை:
    • 80 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட மாநகராட்சிகளில் 230 கவுன்சிலர்கள் இருக்கலாம்.
    • 60 முதல் 80 லட்சம் மக்கள்தொகை கொண்ட மாநகராட்சிகளில் 200 கவுன்சிலர்கள் இருக்கலாம்.
    • 2.25 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகராட்சிகளில் 52 கவுன்சிலர்கள் இருக்கலாம்.
    • 30,000க்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட நகராட்சிகளில் 22 கவுன்சிலர்கள் இருக்கலாம்.
    • 25,000க்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட பேரூராட்சிகளில் 21 கவுன்சிலர்கள் இருக்கலாம்.
    • 10,000 முதல் 15,000 மக்கள்தொகை கொண்ட பேரூராட்சிகளில் 12 கவுன்சிலர்கள் வரை இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்