TNPSC Thervupettagam

தமிழ்நாடு நகர்ப்புற எரிவாயு விநியோகக் கொள்கை 2023

March 24 , 2023 485 days 343 0
  • நகர்ப்புற எரிவாயு விநியோகக் கொள்கையானது (CGD), மாநில அரசானது இயற்கை எரிவாயுவினை ஒரு பசுமை மற்றும் தூய்மையான எரிபொருளாக ஏற்று அதனைப் பயன்படுத்துவதனை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தமிழகம் முழுவதும் உள்ள வீடுகளுக்கு வழங்கப்படும் குழாய் வழி இயற்கை எரிவாயு விநியோகத்தினை மேலும் துரிதப்படுத்துவதற்காக, மாநில அரசானது இந்த விரிவான கொள்கையினை அறிமுகம் செய்துள்ளது.
  • மாநில அரசானது, தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகத்தினை (TIDCO) ஒரு ஒருங்கிணைப்பு முகமையாக நியமித்துள்ளது.
  • எட்டு ஆண்டுகளுக்குள் 38 மாவட்டங்களுக்குமான சேவையினை உள்ளடக்கும் வகையில் 2.28 லட்சம் வீடுகளுக்கு எரிவாயு இணைப்புகளை வழங்கவும், சுமார் 2,785 அழுத்தப் பட்ட இயற்கை எரிவாயு நிலையங்களை நிறுவச் செய்வதற்கும் இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
  • 2018 ஆம் ஆண்டில் நகர்ப்புற எரிவாயு விநியோக உள்கட்டமைப்பினை உருவாக்கச் செய்வதற்கான முதல் ஒப்பந்தங்களை மத்திய அரசு வெளியிட்டது.
  • இது சென்னை மற்றும் அண்டை மாவட்டங்கள் உள்ளிட்டப் பகுதிகளுக்குமான ஒரு ஒப்பந்தமாகும்.
  • 15 மாவட்டங்களில் நகர்ப்புற எரிவாயு விநியோக வலையமைப்புகள் கட்டமைக்கப் பட்டு வருகின்ற நிலையில், மீதமுள்ள 23 மாவட்டங்களுக்கான கட்டமைப்புச் சார்ந்த ஒப்பந்தங்களுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்