TNPSC Thervupettagam

தமிழ்நாடு நிதிசார் தொழில்நுட்ப நகரம்

June 19 , 2023 398 days 252 0
  • தமிழக முதல்வர் அவர்கள் நந்தம்பாக்கத்தில் நிதிசார் தொழில்நுட்ப நகரம் மற்றும் நிதிசார் தொழில்நுட்பக் கட்டிடம் ஆகியவற்றினைக் கட்டமைப்பதற்காக என்று அடிக் கல்லினை நாட்டினார்.
  • நிதிசார் தொழில்நுட்ப நகரமானது, 12,000 கோடி முதலீடுகளை ஈர்க்கும் என்றும் 80,000 பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
  • நிதிசார் தொழில்நுட்பப் பிரிவானது வழிகாட்டல் வாரியத்தில் அமைக்கப்பட்டுள்ள நிலையில் தொழில்துறை அமைச்சர் தலைமையிலான ஒரு நிதிசார் தொழில்நுட்ப ஆளுமைக் குழு ஒன்றினையும் அரசாங்கம் அமைத்துள்ளது.
  • அரசானது, 50 கோடிக்கு மேல் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகை வழங்கியுள்ளது.
  • 2025 ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாடு மாநிலத்தினை நிதிசார் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஒரு உலகளாவிய மையமாக மாற்றும் நோக்கிலான 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதிசார் தொழில்நுட்பக் கொள்கை என்ற சிறப்புக் கொள்கையை தமிழ்நாடு அரசானது முன்னதாக வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்