TNPSC Thervupettagam

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2019-20

February 11 , 2019 1986 days 606 0
  • தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 8ம் தேதியன்று தமிழக சட்டப் பேரவையில் 2019-20 நிதியாண்டிற்கான மாநில நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார்.
சிறப்புக் கூறுகள்
  • தமிழ்நாட்டின் நிதிப் பற்றாக்குறை 2019-20ம் நிதியாண்டில் 44,176.30 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது நிதி விதிமுறையான 3 சதவிகிதம் என்ற வரம்பிற்குள்ளாக, ஒட்டு மொத்த மாநில உற்பத்தியில் 2.50 சதவிகிதமாக இருக்கும்.
  • மாற்றுத் திறனாளி நபர்களுக்கு 3000 இரு சக்கர இயந்திர வண்டிகள் வழங்கப்படும்.
  • கரிம வேளாண்மையை ஊக்குவிப்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் கரிம வேளாண்மை சான்றளிப்பு மையங்கள் அமைக்கப்படும்.
  • 80 ஆழ்கடல் மீன்பிடிப் படகுக் குழுக்களுக்கு 240 நேவிக் கருவிகள், 160 ஐசாட்-2 செயற்கைக் கோள் தொலைபேசிகள், 160 நாவ்டெக் உபகரணங்கள் ஆகியவற்றை அரசு வழங்க முன்மொழிந்திருக்கின்றது.
  • 2000 மின்சாரப் பேருந்துகளை வாங்குவதற்கு அரசு திட்டமிட்டிருக்கின்றது.
  • பழங்குடி மாணவர்களின் நலனிற்காக மிகவும் பின்தங்கிய பழங்குடியினர் பகுதிகளில் புதிய பள்ளிகளை ஆரம்பிக்கின்ற அரசு சாரா குழுக்களுக்கு ஆதரவளிக்க மாநில அரசு 25 கோடியை ஒதுக்கி இருக்கின்றது.
  • தமிழ்நாடு மின்னணு நிர்வாக நிறுவனத்தின் கீழ், செயற்கை நுண்ணறிவு, பெருந் தகவல், இயந்திரக் கற்றல், ஆளில்லா விமானங்கள், இணைய தள விவகாரங்கள் ஆகியவற்றை உபயோகித்திட “சிறப்பு நிபுணத்துவ மையம்” ஒன்று அமைக்கப்படும்.
  • உலக வங்கியின் உதவியுடன் தமிழ்நாடு சுகாதார அமைப்பு சீர்திருத்தத் திட்டம் வெளியிடப்படும்.
  • 250 மெகாவாட் திறனுடன் தேனி, சேலம் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் சூரிய ஒளி மின்சாரத் திட்டங்களை ஆரம்பிக்க அரசு முன்மொழிந்திருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்