வனவிலங்குகள் மற்றும் பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பணயமாக வைத்து, மேற்குத் தொடர்ச்சி மலையின் பாதிப்புக்குள்ளாகும் ஒரு சூழல் மண்டலத்தில் உள்ளூர் மக்கள் மற்றும் பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்திய நியூட்ரினோ ஆய்வகத்தைக் கட்டுவதை தமிழ்நாடு விரும்பவில்லை என தமிழக மாநிலமானது உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வகத்தினை அமைப்பதற்கான ஒரு முன்மொழிவானது மேற்குத் தொடர்ச்சி மலைக்கு ஒரு நிரந்தர சேதத்தை ஏற்படுத்தும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த வழித்தடமானது கேரளா-தமிழ்நாடு எல்லையில் உள்ள பெரியார் புலிகள் காப்பகத்தையும் மதிகெட்டான் சோலை தேசியப் பூங்காவையும் இணைக்கிறது என தமிழக அரசு கூறுகிறது.
மேலும் இந்த திட்டம் அமைக்கப்பட உள்ள பகுதியானது கிழக்கத்திய வாழ்விடங்களில் அமைந்துள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்துடன் சுற்றுச்சூழல் சார்ந்த தொடர்புகளைக் கொண்டுள்ளது.