TNPSC Thervupettagam

தமிழ்நாடு - நிலுவையில் உள்ள வேளாண் கடன்கள்

August 12 , 2023 344 days 214 0
  • அதிக எண்ணிக்கையிலான வேளாண் கடன்கள் நிலுவையில் உள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
  • இந்த ஆண்டு ஜூன் 30 ஆம் தேதியன்றைய நிலவரப் படி, நிலுவையில் உள்ள வேளாண் கடன்களின் எண்ணிக்கை 3.47 லட்சம் கோடி ரூபாயாகும்.
  • இது மொத்தக் கடன்களில் சுமார் 16.5% ஆகும்.
  • தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள கடன் மதிப்பு 2.79 கோடி ரூபாயாகும்.
  • இது இந்தியாவிலேயே மிக அதிக அளவிலானதாகும்.
  • வேளாண் கடன்களின் மதிப்பினைத் தேசிய வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (நபார்டு) மதிப்பிட்டுள்ளது.
  • இதில் வேளாண்மைக்கான குறுகிய காலக் கடன்கள் (18 மாதங்கள் வரையிலான பயிர் உற்பத்தி), பால் அல்லது இழுவை வாகன கொள்முதலுக்கான கடன்கள் போன்ற நடுத்தர காலக் கடன்கள் (18 மாதங்கள் முதல் 5 ஆண்டுகள் வரை) மற்றும் தோட்டக் கலை போன்றவற்றிற்கான நீண்ட காலக் கடன்கள் (5 ஆண்டுகளுக்கு அப்பால்) ஆகியவை அடங்கும்.
  • மாநிலத்தின் மொத்தக் கடன் மதிப்பில், வணிக வங்கிகளின் கடன் மதிப்பு கிட்டத்தட்ட 3.15 லட்சம் கோடி ரூபாயுடன் அதிகபட்சப் பங்கைக் கொண்டிருந்த நிலையில், அதனை அடுத்து பிராந்தியக் கிராமப்புற வங்கிகள் (RRB) - 19,129 கோடி  ரூபாய் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் 13,348 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்களைக் கொண்டு உள்ளன.
  • நிலுவையில் உள்ள வேளாண் கடன்களில் சுமார் 2.43 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடன் ஆந்திரப் பிரதேசம் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.
  • இதில் கர்நாடகா மூன்றாவது இடத்தில் உள்ளது.
  • உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் ஆகியவை முறையே நான்காவது, ஐந்தாவது மற்றும் ஆறாவது இடங்களில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்