2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு பருவநிலை உச்சி மாநாட்டினைத் தமிழ்நாடு அரசு சென்னையில் தொடங்கியுள்ளது.
பருவநிலை நெகிழ்திறன் மிக்க திறன்மிகு கிராமங்கள், பசுமைப் பள்ளிகள் மற்றும் பசுமைக் கோயில்கள் போன்ற பிற முன்னெடுப்புகளையும் முதல்வர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
பருவநிலை உச்சி மாநாட்டில் அம்மாநில அரசின் மூன்று முக்கியப் பணிகளாவன - பருவநிலை மாற்ற திட்டப் பணி, பசுமைத் தமிழ்நாடு திட்டம், மற்றும் தமிழ்நாடு சதுப்பு நிலங்கள் திட்டம் ஆகியவை குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.