TNPSC Thervupettagam

தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டு மசோதா, 2020

February 26 , 2020 1791 days 1203 0
  • பிப்ரவரி 20 ஆம் தேதியன்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி மாநிலச் சட்டமன்றத்தில் தமிழ்நாட்டில் உள்ள காவிரி டெல்டாப் பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கும் மசோதாவை அறிமுகப்படுத்தினார்.
  • இந்த மசோதாவானது மாநிலச் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு, அடுத்த 24 மணி நேரத்திற்குள் (பிப்ரவரி 21 அன்று) மாநில ஆளுநரான பன்வாரிலால் புரோஹித்தின் ஒப்புதலைப் பெற்றது.
  • இந்த மசோதாவானது காவிரி டெல்டாப் பகுதியைப் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக (Protected Special Agriculture Zone - PSAZ) அறிவிக்கின்றது.
  • முன்மொழியப்பட்ட PSAZ ஆனது தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களையும் கடலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள தலா ஐந்து தொகுப்புகளையும் உள்ளடக்கியுள்ளது.
  • எவ்வாறாயினும், இந்த மசோதாவானது தனது வரம்பு எல்லைக்குள் இருந்து திருச்சி, அரியலூர் மற்றும் கருர் ஆகிய மாவட்டங்களை விலக்கியுள்ளது.  இந்த மாவட்டங்கள் புவியியல் ரீதியாக காவிரி டெல்டாப் பகுதிக்குள் வருகின்றன.
  • இந்த மசோதாவானது எதிர்காலத்தில் அரசாங்கம் இதன் வரம்பிற்குள் எந்தவொரு பகுதியையும் சேர்க்கலாம் அல்லது நீக்கலாம் என்று கூறுகின்றது.
  • இந்த மசோதாவானது எதிர்காலத்தில் இந்தப் பகுதியில் எந்தவொரு புதிய இரசாயன பதப்படுத்தும் நிலையங்களுக்கும் அல்லது ஹைட்ரோ கார்பன் ஆய்வுக்கும் அனுமதி வழங்கத் தடை விதிக்கின்றது.
  • இந்த மசோதா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் துறைமுகம், குழாய்த் தொடர்கள், சாலை, தொலைத்தொடர்பு, மின்சாரம், நீர் வழங்கல் மற்றும் பிற பயன்பாடுகள் போன்ற உள்கட்டமைப்பு மேம்பாடுகளை பாதிக்காது.
  • துத்தநாகக் கரைப்பான், இரும்புத் தாது செயல்முறை ஆலைகள், தாமிரக் கரைப்பான், அலுமினியக் கரைப்பான், தோல் பதனிடுதல் மற்றும் கப்பல் உடைக்கும் தொழில்கள் ஆகியவற்றை PSAZல் வேளாண் வளர்ச்சியை மிக மோசமாகப் பாதிக்கும் தொழில்களாக அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது.
  • விவசாயிகளின் நலனுக்காகப் பண்ணை உற்பத்தி மற்றும் பண்ணை உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்காக விவசாய நடவடிக்கைகளைப் பாதுகாப்பதற்கும் அவற்றை மேம்படுத்துவதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்க முதல்வர் தலைமையில் 30 நபர்கள் கொண்ட தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல ஆணையத்தை நிறுவவும் இந்த மசோதா முயலுகின்றது.

PCPIR

  • நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் உள்ள 45 கிராமங்களை பெட்ரோலியம், இரசாயனங்கள் மற்றும் பெட்ரோ இரசாயனங்கள் (Petroleum, Chemicals and Petrochemicals Investment Region - PCPIR) ஆகியவற்றின் நீண்ட முதலீட்டுத் திட்டமிடல் பகுதியாக அறிவிக்கும் 2017 ஆம் ஆண்டு ஜூலை 19 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை மாநில அரசு ரத்து செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்