TNPSC Thervupettagam

தமிழ்நாடு பெண்களுக்கான கொள்கை

January 25 , 2024 305 days 338 0
  • தமிழ்நாடு அமைச்சரவையானது, 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியிடப் பட்ட பெண்களுக்கான கொள்கை வரைவிற்கு ஒப்புதல் அளித்தது.
  • இக்கொள்கையானது கல்வி, பொருளாதார சுதந்திரம் மற்றும் அதிகாரப் பகிர்வு மூலம் பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் கவனம் செலுத்துவதன் மூலம் பெண்களின் முழுமையான மேம்பாட்டினை நோக்கமாகக் கொண்டதாகும்.
  • இந்தக் கொள்கையை செயல்படுத்துவதைக் கண்காணிக்கவும், பாகுபாடுகள் தொடர்பாக ஏதேனும் சிக்கல்கள் எழுந்தால் அதனைத் தீர்க்கவும் தலைமைச் செயலாளர்கள் தலைமையில் மாநில அளவிலான குழுவும், ஆட்சியர்கள் தலைமையில் மாவட்ட அளவிலான குழுக்களும் அமைக்கப்படும்.
  • சமூக நலம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறையும் இந்தக் கொள்கையின் செயலாக்கத்தினைக் கண்காணிக்கும்.
  • இந்த தேசிய அளவிலான கொள்கையானது 2001 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்