தமிழ்நாடு பேறுகாலத் தாய்மார்கள் உயிரிழப்பு விகிதம் 2023-24
August 2 , 2024
114 days
212
- 2023-24 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் பேறுகாலத் தாய்மார்கள் உயிரிழப்பு (MMR) விகிதத்தில் குறிப்பிடத் தக்க வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
- MMR ஆறு புள்ளிகளுக்கு மேல் குறைந்து ஒரு லட்சம் பிறப்புகளுக்கு 45.5 ஆக உள்ளது.
- விருதுநகர் சுகாதாரப் பிரிவு மாவட்டத்தில் (HUD), இந்தக் காலக் கட்டத்தில் எந்தவொரு பேறு காலத் தாய்மார்கள் உயிரிழப்பும் பதிவாகவில்லை.
- 2022-2023 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் பிறப்புகளுக்கு 52.2 ஆக இருந்த MMR ஆனது 2023-24 ஆம் ஆண்டில் 45.5 ஆகக் குறைந்துள்ளது.
- முன்னதாக, MMR ஆனது ஒவ்வோர் ஆண்டும் இரண்டு முதல் மூன்று புள்ளிகள் வரை குறைந்தது.
- இருப்பினும், 2023-24 ஆம் ஆண்டில், MMR 6.7 புள்ளிகள் குறைந்துள்ளது.
- நார்வேயில் ஒரு லட்சம் பிறப்புகளுக்கு 1.8 என்ற வீதத்தில் மிகக் குறைந்த MMR விகிதம் பதிவாகியுள்ளது.
- சுவீடன் மற்றும் பின்லாந்து போன்ற பிற ஐரோப்பிய நாடுகளும் ஒற்றை இலக்க MMR வீதங்களுடன் உயர் மதிப்பு (தங்கம்) தர நிலையினை அடைந்துள்ளன.
Post Views:
212