இச்சட்டத்தின் கீழ், தமிழ்நாடு மாநிலம் முழுவதும் கரோனா பாதிப்பு மண்டலமாக அறிவிக்கப் பட்டுள்ளது.
அரசாங்கக் கட்டிடங்கள், தனியார் கட்டிடங்கள், மருத்துவமனைகள், தங்கும் விடுதிகள் மற்றும் நிறுவனங்கள் போன்ற இடங்கள் பார்வையாளர்களுக்குத் தேவையான நீர்க் குழாய்கள், கை கழுவும் இடங்கள், கை கழுவும் திரவம் மற்றும் சோப்புகள் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.
பார்வையாளர்கள், அவர்களது கைகளைக் கழுவிய பின்னரே இந்தப் பகுதிகளுக்குள் நுழையவும், வெளியேறவும் அனுமதிக்கப் பட வேண்டும்.
கோவிட் – 19 பாதிப்பு குறித்து ஏதேனும் தகவல் இருப்பின் ஆய்வகங்கள், மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் ஆகியோர் அது குறித்து 24 மணி நேரத்திற்குள் பொதுச் சுகாதார மற்றும் தடுப்பு மருந்து இயக்குநரகத்திற்கு எழுத்து மூலமாகத் தெரிவிக்க வேண்டும்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் தங்களது வளாகங்களில், கோவிட் – 19 நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக நோய்த் தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு மாநில அரசானது கோவிட் – 19 நோய்த் தொற்றை தமிழ்நாடு பொதுச் சுகாதாரச் சட்டம், 1939ன் கீழ் “அறிவிக்கப்பட்ட நோயாக” அறிவித்து உள்ளது.
இந்த ஒழுங்கு முறைகள் தொற்று நோய்கள் சட்டம், 1897-ன் கீழ் குறிப்பிடப் பட்டுள்ளன.
இந்த அறிவுறுத்தல்களைக் கடைபிடிக்கத் தவறியவர்கள் மேலே கூறிய இரண்டு சட்டங்களின் விதிமுறைகளின் கீழ் நடவடிக்கைகளை எதிர் கொள்ள நேரிடும்.
இது தவிர, இந்த விதிமுறைகளை மீறியவர்கள் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 188-ன் கீழ் 6 மாத சிறைத் தண்டனையையோ அல்லது அபராதத்தையோ அல்லது இரண்டையுமோ எதிர்கொள்ள நேரிடுவர்.
பின்வரும் சட்டங்கள் தொற்று நோய்கள் மற்றும் கொள்ளை நோய்களின் போது தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வழிவகை செய்கின்றது.
இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 260 மற்றும் 270 (உயிருக்குத் தீங்கு விளைவிக்கும் ஆபத்தான நோய்களைப் பரப்பும் வகையில் அலட்சியமாக அல்லது கொடிய நோய்களைப் பரப்பும் வகையில் செயல்படுதல்)
This is very essential.The vaccine should be taken every citizen of According to the act and prevention of Infectious disease rules.There is no compromise.