TNPSC Thervupettagam

தமிழ்நாடு மருத்துவமனைகள் தினம் – ஜூலை 30

July 30 , 2019 1817 days 768 0
  • தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகள் ஒவ்வொரு ஆண்டும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்த தினமான ஜூலை 30 ஆம் தேதியை “மருத்துவமனை தினமாக” அனுசரிக்கவிருக்கின்றன.
  • புதுக்கோட்டையைச் சேர்ந்த இவர் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாட்டின் புகழ்பெற்ற பெண் மருத்துவர்களில் ஒருவராக விளங்கினார். இவர் தமிழ்நாடு மாநிலத்தின் முதலாவது பெண் சட்டசபை உறுப்பினர் ஆவார்.
  • மேலும் இவர் 1954 ஆம் ஆண்டில் சென்னை அடையாறு புற்றுநோய் மையத்தையும் நிறுவியுள்ளார்.
  • பெருநிறுவன சமூகப் பொறுப்புடைமை நிதிகளை அளிக்கும் அரசு சாரா நிறுவனங்கள், நன்கொடையாளர்கள், சமுக அமைப்புகள் மற்றும் பெரு நிறுவனங்களைப் பாராட்டுவதோடு மருத்துவமனைகளால் வழங்கப்படும் சேவைகளை விளம்பரப் படுத்துவதற்காகவும் இத்தினம் அனுசரிக்கப்படுகின்றது.
  • 1956 ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு பத்ம பூசண் விருது வழங்கி கௌரவித்தது.
  • இவருடைய புத்தகம் : சட்டமன்ற உறுப்பினராக எனது அனுபவங்கள்.
  • தேவதாசி முறையை ஒழிக்கும் சட்டத்தின் பின்னணியில் இருந்த முக்கியமான நபர் இவராவார். (மசோதா அறிமுகப்படுத்தப் பட்டது 1930 ஆம் ஆண்டில் – மசோதா நிறைவேற்றப் பட்டது 1947 ஆம் ஆண்டில்)

https://lh3.googleusercontent.com/-64Ixlzn68Rs/XT_tvSTdrOI/AAAAAAAAAXQ/j4ecBdF0W7wVFlqsxpoQiNNE_uLopdFWACK8BGAs/s512/2019-07-30.png

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்